Categories
அரசியல்

இந்தி மொழியை திணிக்கக் கூடாது…. தொல். திருமாவளவன் எச்சரிக்கை….!!!!

இந்தி மொழியைத் திணிக்கும் விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகத்திற்கு நிதி வழங்க மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என  கே‌.என் நேரு  கூறியிருந்தார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆதரிக்கின்றனர். இருப்பினும் ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் சொத்து வரியை குறைக்க வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

அதன்பிறகு அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி பேசப்பட வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்‌‌. இது கண்டிக்கத் தக்க விஷயமாகும். அதாவது இந்தியா முழுவதும் பாஜக அரசு  இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தி மொழியை செயல்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள். மொத்தம் இருக்கும் 22 தேசிய மொழிகளில் இந்தி மொழியும் ஒன்றாகும். அப்படி இருக்கும் போது இந்தி மொழியை அனைவரும் பேச வேண்டும் எனக் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகும்.‌ இதற்கு எதிராக இடதுசாரிகள், காங்கிரஸ், மத சார்பற்ற கூட்டணி கட்சிகள், திமுக போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு அளிக்கும்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது உள்துறை மந்திரி அமித்ஷா கிரிமினல் செயல்முறை அமெண்ட்மெண்ட் குறித்து விவாதித்தார். அதன்பிறகு சாதாரண வழக்குகளில் கூட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழகத்திற்கு வர தொடங்கியுள்ளனர். இவர்களை அரசு ஆதரித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மேலும் இலங்கை தமிழர்கள், தமிழர்களோடு இணைந்து வாழ மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை தமிழக அரசு வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |