Categories
அரசியல் சற்றுமுன்

இந்துக்களுக்காக அவதாரம் எடுத்தவர்கள் எங்கே ? முக.ஸ்டாலின் கேள்வி …!!

இந்துக்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று சொல்பவர்கள் எங்கே சென்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை  சட்டத்திற்க்கெதிரான போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது அல்ல. இந்தியர்களை கக்கூடிய  போர் என்பதை மறந்துவிடக்கூடாது. குடியுரிமை பதிவேட்டால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல , இந்துக்கள் மட்டுமல்ல ,  இஸ்லாமியர்கள் மட்டும் என்று சொல்வதே தவறு. இதில் ஒட்டுமொத்த இந்தியர்களை பாதிக்கின்றது.

அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேர் குடியுரிமை இழந்து இருக்கிறார்கள். அதில் 6 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் , 13 லட்சம் பேர் இந்துக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்து மதத்தை காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்தவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்.குடியுரிமை பதிவேடு மூலம் இஸ்லாமிற்கு மட்டும்தான் பாதிப்புதான் என்று நம்மை இந்துக்களின் எதிரிகளாக காட்டுவதற்கு ஒரு கூட்டம் துடித்துக்கொண்டிருக்கிறது. திட்டமிட்டு சதி செய்து அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இந்தியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை மதத்தின் அடிப்படையான பிரிக்கின்றார்கள். இந்து மத நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் எந்த கடவுளையும் வணங்கலாம் , எந்த கோவிலுக்கும் செல்லலாம். இது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் அதிலே தங்களுடைய வன்மத்தை அராஜகத்தை சர்வாதிகாரத்தை செய்யக்கூடாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |