Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்துக்களுடன் தொடர்புடையது காந்தாரா, பொன்னியின் செல்வன்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!!

காந்தாரா, பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கங்கனா ரணாவத். இவர் தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் இந்தியா டுடே நிகழ்ச்சி ஒன்றை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது ரிலீசாகும் திரைப்படங்கள் இந்திய தன்மை நிறைந்ததாக இருக்கின்றது. காந்தாரா திரைப்படத்தை நாம் எடுத்துக் கொண்டால், இத்திரைப்படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இது போலவே பொன்னியின் செல்வன் திரைப்படமும் சோழர்களை பற்றியது. காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் காட்சிகளை இந்து மதிப்புடைய விஷயங்களை பார்வையாளர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றார்கள்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் தங்கத்தால் பாலிவுட், நம் கலாச்சாரத்தில் இருந்து விலகி மேற்கத்திய திரைப்படங்களை உருவாக்குகின்றது. இனி மக்கள் அவர்களின் படங்களை தங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியாது என நான் நினைக்கின்றேன். நடிகர்களை ரோல் மாடலாக கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தற்போது அனைவருக்கும் தெரியும். நான் ஏன் ஸ்ரீ ராமரையோ அல்லது ஏபிஜே அப்துல் கலாமையோ அல்லது வேறொருவரையோ ரோல் மாடலாக வைத்துக் கொள்ளக்கூடாது என அவர்கள் நினைக்கின்றார்கள். இந்த விழிப்புணர்வு நட்சத்திர கலாச்சாரத்தை முடித்துவிட்டது. நெப்போட்டிசம் தற்போது குறையவில்லை என எண்ணுகின்றேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் மக்கள் தற்போது விழிப்புடன் இருக்கின்றார்கள் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |