இந்துக்களே உஷாராக இருங்கள் தந்தையும் மகனும் நாடகமாடுகிறார் என்று நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை அடுத்து அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் கையில் வேல் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்த போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான பிக் பாஸ்-2 பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நேற்று ஸ்டாலின் வேலை பிடித்து மக்களை ஏமாற்றினார். இன்று அவருடைய மகன் உதயநிதி வேலை கையில் பிடித்து நாடகமாடி வருகிறார். உதயநிதி இன்று தேர்தலுக்காக ஓட்டுகளை பெற தனது தந்தையுடன் சேர்ந்து நாடகமாடுகிறார். எனவே இந்துக்களே உஷாராக இருங்கள். இவர்கள் எத்தனை வேடம் போட்டாலும் வரும் தேர்தலில் ஜெயிக்க மாட்டார்கள். இந்த விரோதிகளை விரட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்