கர்நாடகா மாநிலத்தில் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல் மந்திரியாகயிருந்த சித்தராமையா, வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்றதுடன், தனிமத அந்தஸ்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வீரசைவ-லிங்காயத் சமுதாய விவகாரத்தில் காங்கிரஸ் நடந்துகொண்டது பற்றி நான் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தேன். எந்தஒரு சமுதாய விவகாரத்திலும் கை வைக்ககூடாது என்பது என் கருத்தாகும். வீரசைவ-லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் பேசியது தொடர்பாக நான் கூற விரும்பவில்லை. தவறு செய்ததை ஒப்புகொள்வதில் தவறில்லை.
சமுதாயத்தினை உடைக்கும் முயற்சி வேண்டாம் என இதற்கு முன்பு நான் மந்திரியாக இருந்த போதும் கூறினேன். இப்போதும் அதைதான் கூறுவேன். நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தாங்கள் இந்துக்கள் எனக்கூறி வருகின்றனர். இந்துத்வா குறித்து பா.ஜனதா தலைவர்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். தனக்கு சிவனின் மகன் குமாரின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையில் எதிர்க் கட்சி தலைவர் பெயர் சித்தராமையா ஆகும். காங்கிரஸ் கட்சியினர் தங்களது பெயரை கல், மண் என வைத்துகொண்டுள்ளோமா?. அத்துடன் இந்துத்வா பா.ஜனதா-வின் சொத்தா..?. காங்கிரசுக்கு இந்துத்வா சொந்தமில்லை என பா.ஜனதா சொல்ல எந்த தகுதியும் இல்லை என்று அவர் கூறினார்.