உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. அதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம்.
கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்து உப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்து உப்பை பயன்படுத்தினால் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க முடியும். இந்துப்பு பொடியை தேனில் கலந்து முகத்தில் தடவி வர முகம் மென்மையாக மாறும்.
இந்த உப்பு முகத்தில் உள்ள இறந்த செல்களை மீண்டும் உருவாக்குகிறது. இந்த இந்துஉப்பு பொடியை வைத்து பால் அல்லது தயிரில் குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் முழுவதும் ஒருவித சோர்வு இருந்தால் இந்து உப்பை எண்ணெயில் கலந்து மசாஜ் செய்து வர உடல் வலி நீங்கும். முகத்தில் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும். முகத்தில் உண்டாகும் முகப்பருக்கள் மற்றும் எரிச்சலை குணமாக்க இது பயன்படுகின்றது.
உப்பை நன்றாக பொடி செய்து தேன், பன்னீர் போன்றவற்றில் கலந்து பேஸ்டாக மாற்றி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு விரைவில் குணமாகும். சருமத்திற்கு சிறந்த டோனர் ஆகவும் இது பயன்படுகின்றது. இந்து உப்பு அரை டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை 2 சொட்டு எலுமிச்சை எண்ணெய் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து இதனை பயன்படுத்தி வந்தால் முகம் பளபளக்கும்.