Categories
தேசிய செய்திகள்

#JUSTIN : இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை…. நீடிக்கும் பதற்றம்…. 144 தடை அமல்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஆவார். ஹர்ஷா நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அதன்பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொட்டபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர் இருதரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பதற்றமான சூழல் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் இந்த விவகாரம் தொடர்பில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விவசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, இன்று (திங்கட்கிழமை) சிவமொக்கா மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |