இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின் இந்து-முஸ்லீம் குழுக்களுக்கு இடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Any other group acting like this, would see cops in riot gear out – why are @leicspolice taking such a soft line with these thugs?#Leicester
— Steve 🇬🇧🏴🏴 (@LordCLQTR) September 18, 2022
கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர். இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, லீசெஸ்டர்ஷைர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, அப்பகுதியில் இந்து மற்றும் முஸ்லீம் குழுக்களுக்கிடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்தது. மேலும் இதுவரை, 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.