Categories
தேசிய செய்திகள்

இந்து தர்மத்திற்கு மோடி பெருமை சேர்த்துள்ளார் – பாபா ராம்தேவ்

ராமர் கோவில் பூமி பூஜை பார்ப்பதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்பு இந்தியாவின் பெரிய அதிர்ஷ்டம் என யோக குரு கூறியுள்ளார்.

ராமஜென்ம பூமி பூஜையில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் அனைவரும் ராமர்கோவில் பூமி பூஜையை பார்க்க கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்தியாவின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த நாட்டில் ராமராஜ்யம் நிறுவ பதஞ்சலி யோக பீடம் அயோத்தியில் பெரிய குருகுலம் ஒன்றை தொடங்கும். அதில் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் வருபவர்கள் அனைவரும் வேதம் மற்றும் ஆயுர்வேதம் கற்பார்கள். இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்.

பல தலைமுறைகள் மிகுந்த பெருமையுடன் இந்த நாளை நினைவு கூறுவர். புதிய வரலாறு படைத்த இந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும். ராமர் கோயில் காட்டுவதன் மூலமாக ராமராஜ்யம் நாட்டில் கட்டாயம் நிறுவப்படும். மேலும் கலாச்சாரம், நிதியியல் மற்றும் அரசியல் விவகாரத்தின் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நாட்டில் முழுவதுமாக முடிவடையும். ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை உண்டாகும். நரேந்திர மோடியை பிரதமராக அடைவதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். அவரே ராம, ஹனும பக்தர்.

பிரதமர் இந்து தர்மத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று ராம்தேவ் கூறியுள்ளார். அவருடன் சுவாமி அவ்தேஷாநந்த் கிரி, சிதானந்த் மஹாராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள். மேலும் “உலகம் முழுவதுமே இந்தியாவை பார்த்துக்கொண்டிருக்கிறது. உலக ஒற்றுமை என்னும் செய்தியை அறிவிக்கும் வரலாற்று தினமாக இந்த நாளை கொண்டாட வேண்டும்” என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

Categories

Tech |