எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தோப்பன் குடியிருப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மகா சபாவின் மாநில தலைவராக இருக்கிறார். இவர் ஈத்தாமொழி சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது இன்பன்ட் ஜெகதீஸ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் பாலசுப்ரமணியனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் ஈத்தாமொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இன்பன்ட் ஜெகதீஷை கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இன்பன்ட் ஜெகதீஷ் மீது ஈத்தாமொழி மற்றும் ராஜாக்கமங்கலம் காவல்நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.