Categories
மாநில செய்திகள்

இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் ஆ.ராசா…. நாக்கை அறுத்தால் ” 1 கோடி ரூபாய் பரிசு” …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஆ.ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசியதற்கு அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த  ஒருவர் தனது முகநூலில் ஆ. ராசா இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரின் நாக்கை யார் அறுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்  மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என பதிவிட்டார். இந்த பதிவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |