தமிழ், தெலுங்கு என பழமொழிகளிலும் இசை அமைத்து பல்வேறு ஹிட் பாடல்களை கொடுப்பவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது ஓ பரி என்ற பாடலை பாடி இசையமைத்துள்ளார். இந்த பாடல் youtubeல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை பலரும் ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடி இசையமைத்துள்ள இந்த பாடல் இந்து மத உணர்வை புண்படுத்தி விட்டதாக புகார் எழுந்து உள்ளது.
அதாவது பிஹினி உடையில் பெண்கள் பாடும் போது பாடலில் “ராமா ஹரே ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே என்ற வரிகள் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து நடிகை கராத்தே கல்யாணி ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.