இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 116 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு Nusa Tengarra என்ற மாகாணத்தில் Seroja வெப்பமண்டல புயல் ஏற்பட்டதால் வெள்ளம் தூண்டப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 76 நபர்கள் மாயமானதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் தலைவரான Doni Monardo கூறியுள்ளார்.
60 நபர்கள் கிழக்கு புளோரஸ் மாவட்டத்திலும், 28 நபர்கள் லெம்ப்டா மாவட்டத்திலும், 21 பேர் அலோர் மாவட்டத்திலும், மூன்று பேர் மலாக்கா மாவட்டத்திலும், ஒருவர் எண்டே மாவட்டத்திலும், 2 பேர் சாபு ரைஜுவா மாவட்டத்திலும், ஒருவர் குபாங் மாவட்டத்திலும், குபாங் நகரத்தில் ஒருவருமாக மொத்தம் 116 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 146 ஆகும். 8424 நபர்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். இதில் சுமார் 343 குடியிருப்புகள் தரைமட்டமாக அழிந்துள்ளது. மேலும் 33 குடியிருப்புகள் அதிகமாக சேதமடைந்துள்ளது. 110 வீடுகள் சிறிய அளவில் சேதமடைந்திருக்கிறது.