இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தோனேசியா மாகாணத்தில் ஜகர்த்தா நகரில் உள்ள பரிகி மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் தங்கச் சுரங்க பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புரங்கா கிராமத்து கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தங்கச் சுரங்க பணி நடைபெற்று வந்தது.
திடீரென்று அப்பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் மீதமுள்ள 70 பணியாளர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசு தரப்பில் கூறியதாவது, இறந்த ஐந்து உடல்களையும் அவர்களின் குடும்பத்தினர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இதை தொடர்ந்து மாயமான மற்ற 70 பணியாளர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். இச்சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.