இந்தோனேசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு சேதமும் உண்டாகவில்லை. தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தில் கட்டாபுவின் தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவாக நிலநடுக்கம் பதிவாகி இருக்கின்றது.
மேலும் கடலுக்கு அடியில் 627 கிலோமீட்டர் மையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்பரப்பில் குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பற்றி இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.