Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்தோனேஷியாவில் உயிரிழந்த மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது”…அஞ்சலி செலுத்திய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி….!!!!

இந்தோனேசியாவில் உயிரிழந்த மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி, கலெக்டர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவ கிராமத்தில் வசிப்பவர் மரிய ஜெசின்தாஸ்(33). இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும் தூத்தூர் மற்றும் கேரளாவில் வசித்த 7 மீனவரும் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் நிக்கோபார் தீவிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வில்லை என்பதால் இந்தோனேசிய கடற்படையினரால் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களில் 4 பேரை கடந்த மாதம் 28ஆம் தேதி அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதேசமயம் படகின் உரிமையாளர் மரிய ஜெசின்தாஸ் உள்ளிட்ட 4 பேரும் சிறையில் இருந்துள்ளார்கள்.

இந்நிலையில் சிறையில் இருந்த மரிய ஜெசின்தாஸ்க்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அதனால் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 20-ஆம் தேதி மரிய ஜெசின்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தகவலை மரிய ஜெசின்தாஸ்வின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மரிய ஜெசின்தாஸ் சாவிற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மேலும் அவருடன் சிறையில் இருந்த மற்ற 3 மீனவர்களையும் மீட்க வேண்டும் என்றும், மரிய ஜெசின்தாஸ் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு மட்டுமல்லாது பலியான மரிய ஜெசின்தாஸ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதன்படி கொண்டுவருவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்தோனேசியாவிலிருந்து விமானம் மூலமாக மரிய ஜெசின்தாஸ் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்பின் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக நேற்று நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊரான தூத்தூருக்கு கொண்டுவரப்பட்டு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மீனவர் உடலுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய்வசந்த் எம்.பி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனை அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ 5 லட்சமும், விஜய்வசந்த் எம்.பி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் தலா 2 லட்சமும் நிவாரண உதவித் தொகையாக உயிரிழந்தவரின் தாயாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சரிடம் இந்தோனேசியா சிறையில் வாடும் மீதம் உள்ள மூன்று பேர்களையும் இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது மகன் இழப்பிற்கு நீதி வேண்டும் என்று அவருடைய தாயார் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். இதை தொடர்ந்து மரிய ஜெசின்தாஸ் உடலுக்கு கிறிஸ்தவ ஆலயத்தில் இறுதி சடங்கு முடிந்து கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மீனவ மக்கள் நிறைய பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Categories

Tech |