Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவுக்குள் புகுந்த குரங்கு அம்மை…. வெளியான தகவல்…..!!!!!

வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டு இந்தோனேஷியாநாட்டுக்கு திரும்பிய ஒரு நபருக்கு சென்ற 5 நாட்களாக குரங்கம்மைக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து பரிசோதனை முடிவில், அந்த நபருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்ற மே மாதம் இங்கிலாந்திலிருந்து குரங்கம்மை நோய்ப்பரவல் கண்டறியப்பட்டது.

அதன்பின் ஜூலை மாதத்தில் குரங்கு அம்மையை சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதனை தொடா்ந்து நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலகநாடுகள் அறிவுறுத்தப்பட்டது. இதுவரையிலும் 90 நாடுகளில் 31 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |