Categories
உலக செய்திகள்

இந்தோ-பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பு விரிவாக்கம்…. எச்சரிக்கை விடுத்த சீனா…..!!!!!

இந்தோ- பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியால் கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில் சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் தூதருமான லீ யுசெங்க் கூறியபோது, “சோவியத் யூனியன் சிதைந்த பின் வார்சா உடன்படிக்கையுடன் சேர்த்து நேட்டோ அமைப்பும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேட்டோ வலுவடைந்து விரிந்துகொண்டே செல்கிறது. இந்த விரிவாக்க முயற்சியின் காரணமாகத்தான் உக்ரைனில் தற்போது போர் ஏற்பட்டுள்ளது.

இதுபோல அமெரிக்க நாட்டின் இந்தோ-பசிபிக் திட்டம் அபாயகரம் ஆனது. இவை தடுக்கப்படாவிட்டால் கற்பனை செய்ய இயலாத விளைவுகளைக் கொண்டு வரும். முடியில் ஆசிய-பசிபிக் பகுதியை படுகுழியில் தள்ளிவிடும்” என்று கூறினார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை அடக்குவதற்கு அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியின்படி அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற 4 நாடுகள் இணைந்த குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவை ஆசியாவில் நேட்டோவை உருவாக்கக்கூடிய அமெரிக்காவின் முயற்சி என்று சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இப்போது குவாட் ஆகிய அமைப்புகளால் உக்ரைன் போர் மாதிரியான பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |