அமெரிக்காவில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சி மாநாடு மற்றும் இந்தோ -பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர் மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் உள்ள 6 இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் இது குறித்த அவர் பேசியதாவது. இந்தியா தனது வலிமையை அதிகரிக்கவும், புவிய அரசியல் சூழலில் முக்கிய இடம் வைக்கவும் அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் இந்த பயணத்தில் இந்திய பட்டைய கணக்காளர் நிறுவனத்திற்கும் பங்கு உள்ளது. தற்போது இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
இந்நிலையில் நான் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு நான்கு கோரிக்கைகளை வைத்துள்ளேன். அதில் ஐ.சி.ஏ.ஐ.-இன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட்டு, போட்டி தன்மையுடன் கூடிய விலையில் உயர்தர பொருட்களை இந்தியா வழங்கும் என்ற தகவலை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உறுப்பினர்கள் பயன்படுத்த வேண்டும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனங்கள் உலகளாவிய கூட்டு முயற்சிகளை மேம்படுத்தி சர்வதேச அளவிலான நிறுவனங்களாக மாற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.