Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு…. கத்தி கூச்சலிட்ட பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

ரோட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் விலாசம் கேட்பது போல நடித்து வாலிபர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பேராலய தெருவில் ராஜாசிங் என்பவர் தனது மனைவியான சரோஜினியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சரோஜினி மளிகை பொருட்களை வாங்கிவிட்டு லூக்கா மருத்துவமனை நோக்கி நடந்து சென்றிருக்கும் போது, எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் விலாசம் கேட்பதுபோல் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் திடீரென சாரோஜினியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இதனையடுத்து சரோஜினியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து நாசரேத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் அந்த நபரின் பெயர் முத்து என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 1/2 பவுன் நகையை மீட்டு சரோஜினியிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |