Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இந்த அட்ரெஸ் எங்க இருக்கு” மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |