ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு ஹார்திக் பாண்டியா அதில் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி படு மோசமாக விளையாடி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஆகையினால் ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோற்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது குறித்து பல வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு ஹார்திக் பாண்டியா அதில் இல்லாதது தான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், அந்த அணி ஏலத்தின் போதாவது க்ருனால் பாண்டியாவை வாங்கியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஏலத்திற்கு முன்பாகவே ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கழற்றி விட்டது மிகப்பெரிய தவறு என்றும் தெரிவித்துள்ளார்.