Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த அப்பத்தை செய்து சாப்பிட கொடுங்க… அப்புறம் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

நெய்யப்பம் செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு                          – 1 கப்
கோதுமை மாவு                – 3/4 கப்
வெல்லம் துருவியது     – 1/2 கப்
தேங்காய்                              – 1/2 கப்
ஏலக்காய்த்தூள்                – 1 தேக்கரண்டி
உப்பு                                        – 1/4 தேக்கரண்டி
நெய்                                        – 1/4 கப்
சமையல் சோடா              – சிறிதளவு

செய்முறை :

முதலில்வெல்லத்தை எடுத்து நன்கு துருவி கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றியதும். அதனுடன் துருவிய வெல்லம்சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன், துருவிய தேங்காய், உப்பு, பேக்கிங் சோடா, கோதுமை மாவை சேர்த்து நன்கு கலந்து  வெல்லப்பாகை வடிகட்டி இட்லி மாவு பதத்திற்கு எடுத்து கரைக்கவும்

பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி, மிதமான சூட்டில் காய  வைத்ததும்,  கல்லில் ஒவ்வொரு குழியிலும் கலந்து வைத்த மாவை ஊற்றி கொள்ளவும்.

பிறகு கல்லில் ஊற்றிய மாவானது, ஒருபுறம் வெந்தவுடன், மறுபுறம்  திருப்பி போட்டு, வேகவைத்து எடுத்து பரிமாறினால் ருசியான  நெய்யப்பம் ரெடி.

Categories

Tech |