Categories
மாநில செய்திகள்

இந்த அளவிற்கு மேல் கட்டிடம் கட்டினால்….. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம்…… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த அளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் சென்னை, கோயம்புத்தூரில் உள்ளிட்ட பெரு நகரங்களில் கட்டடங்களின் எண்ணிக்கையும் அவற்றின் உயரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு அறிக்கையின்படி 20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேலே கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடங்களின் கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |