Categories
மாநில செய்திகள்

இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாவே இல்லை!…. வேதனையை அனுபவிக்காங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் அ.ம.மு.க-வினர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து கூறினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் “அ.தி.மு.க பொதுச்செயலாளர் பற்றி சிலர் மேல் முறையீடு செய்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைகேட்ட நீதிபதி, விசாரணை முடியும்வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார். பொதுச் செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிட வில்லை. தி.மு.க ஆட்சி மெத்தனமாக நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க திட்டப் பணிகளை திறந்து வைத்து வருகின்றனர். பெரியத் திட்டம் எதுவும் பற்றி அறிவிக்கப்படவில்லை. நாங்கள் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம். அதனை திறந்து வைத்துள்ளனர். இதனிடையில் சட்டகல்லூரி கொண்டுவந்தோம். அதனை திறந்து வைத்து வருகின்றனர். முடிவுற்ற பணிகளைத் தான் திறந்து வைக்கின்றனர். அதே நேரம் பாலங்களை திறந்து வைக்கின்றனர். எனினும் கோவையில் 133 வேலைகளுக்கு 11முறை டெண்டர் அறிவித்து உள்ளனர். ஆனால் ஒருவரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை.

ஏனெனில் கமிஷன் அதிகமாக கேட்பதாக தெரிவிக்கின்றனர். தி.மு.க ஆட்சியில் பல பணிகள் முடங்கி இருக்கிறது. கடந்த 2021 ஆம் வருடம் பொதுத்தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகள் தி.மு.க எதையும் நிறைவேற்றவில்லை. மின்கட்டணம் உயர்த்தி இருக்கின்றனர். 50 % மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சொத்து வரி 100 % உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடைகளுக்கும் வரிஉயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையில் மக்கள் நிம்மதியாகயில்லை. தி.மு.க தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்துசெய்வோம் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் காவிரி பிரச்னையில் பார்லி மென்டில் குரல் கொடுத்து போராடினோம். எனினும் திமுக-வினர் நீட்தேர்வுக்கு எந்த குரலும் தெரிவிக்கவில்லை” என்று பழனிசாமி கூறினார்.

Categories

Tech |