Categories
அரசியல்

இந்த ஆட்சியை ஒழிக்கணும்…! ஆவேசமான சீமான்…. பரபரப்பு பேட்டி …!!

சீமானிடம் இலங்கை படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோர நடவடிக்கை எடுப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது என்ற கேள்விக்கு, இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் சிங்களனுக்கு கை கொடுத்து அழிக்க வைத்தார்கள்.11 ஆண்டுகள் கழித்து திடீர்ன்னு சர்வதேச விசாரணை என சொல்கிறார்கள். 10வருடத்துக்கு மேலாக மத்திய அரசோடு ஆட்சியில் இருந்த போது தான் போர் நடந்துச்சு.

நாங்கள் 11 ஆண்டுகளாக சர்வதேச விசாரணை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். சும்மா வெற்றி ஒரு அறிக்கையை போட்டு ஈழத்தின் மீது அக்கறை காட்டுறாங்களாம் ? ஒரு மாநில கட்சி தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் 18 ஆண்டுகள் இருந்த கட்சி திமுக தான். இதே திருக்குறள் தானே தேசிய நூலாக அப்பவே ஆக்கிருக்கலாம் அல்லவா. திருக்குறளை எந்த தேசித்துக்கு ஆக்குவீங்க ?

இந்திய தேசியத்துக்கா அல்ல தமிழ் தேசியத்துக்கா ? திருக்குறள் உலக நூல், உலக பொதுமறை. தேர்தல் அறிக்கையில் 1000, 1,500 கொடுக்கட்டும். அந்த பணத்தை எங்கிருந்து எடுப்பாங்க ? ஆயிரம் ரூபாய் என்றால் எத்தனை கோடி குடும்ப அட்டைகள் இருக்கு ?

ஒரு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் என்றால் எத்தனை ஆயிரம் கோடி பணம் எங்கிருந்து உங்களுக்கு வருது ? அது ஏன் மக்களிடம் தான எடுக்கணும். அதுக்கு அந்த பணத்தை அவுங்களே வச்சுக்கிட சொல்லி விடலாம். ஒண்ணாவது உருப்படியா இருக்கா ? எல்லாமே வெற்று, பசப்பு, இனிப்பு வார்த்தைகளை பேசி பேசி இன்னும் என இன சொந்தங்களை, மக்களை பிச்சகார கூட்டமாகவே வைத்து ஆயிரம், ஐநூறுக்கு கையேந்த வைத்து… இது ஒரு ஆட்சி முறை. இதைத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறோம் என சீமான் பேசினார்.

Categories

Tech |