ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றி விட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும் என அறிவித்துள்ளார்.
ரஷ்ய படைகள் தனது உக்கிரமான தாக்குதலை இரண்டாவது நாளாக உக்ரைன் மீது நடத்தி வருகின்றது. ரஷ்யப் படைகள் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை உக்ரைன் மீது நடத்துவதால் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அந்நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளையும் தாக்கி ரஷ்ய படைகள் அளித்துள்ளன. அதேபோல் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடியும் கொடுத்து வருகிறது.
இதனால் தொடர்ந்து போர் மயமாக இருப்பதால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-நகரில் நெருங்கி சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் உக்ரைனின் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கையில் எடுக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். மேலும் உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். இதனால் உக்ரைனில் தற்போது உள்ள ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.