வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் உலகின் தென் துருவம் அண்டார்டிகா பகுதியில் மட்டுமே தெரியும். சுமார்ஒரு நிமிடம் 54 வினாடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏற்படும் போது வானில் நட்சத்திரங்கள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று சூரிய கிரகணம் மதியம் 12 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.