Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வேண்டும்…. 18 சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்ற மலை வாழ் மக்கள்…. !!!!

மழை வேண்டி  கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டு 18 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் தாங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அதன் பின்னர் பேய்கள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும் தங்களது கிராம எல்லையில் திருநீறு மூலம் எல்லைக்கோடு வரைந்து கட்டு கட்டினர். பின்னர் அவரவர்கள் தங்களது கிராமத்திலிருந்து 18 சாமி சிலைகளையும் ஆரூர்-சேலம் சாலையில் அமைந்துள்ள வெள்ளையப்பன் சாமி கோவிலுக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்த பின்னர்  சாமி சிலைகளை தங்களது கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |