அண்ணா பல்கலைக்கழகம் சென்னையானது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா கட்டிடக்கலை மற்றும் மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லுாரிகளை உள்ளடக்கியது. 2011 ஆம் ஆண்டு செப்டம்பா் 14 ஆம் நாள் பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்க ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இங்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் இந்த கல்லூரியில் Mphil படிப்பை பயின்று வருகின்றனர். இந்நிலையில் M.phil படிப்பு நடப்பு ஆண்டில் இருந்து கைவிடப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே M.phil படிப்பில் பயின்று வருவோர் தொடர்ந்து பயிலலாம் என்று அறிவித்துள்ளது.