Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு 1 1/2காலி இடங்கள்… விண்ணப்பிதற்கான தேதி 5 நாட்கள் நீட்டிப்பு…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!!!!!

பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்சி முடிவுகள் வெளியான பின் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அமைச்சர் பொன்முடி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வருடம் ஒன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இந்த வருடம் முதல் பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |