நெல்லையில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரிலிருக்கும் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவ்விசாரணையில் அவர் ராதாபுரத்தில் விவசாய தொழிலை செய்து கொண்டு, அங்கு வசித்து வசித்து வந்த முருகன் என்பது கண்டறியப்பட்டது. மேலும் இவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்த சம்பவமும் தெரியவந்தது.