குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் இந்த ஆண்டுக்குள் கட்டப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின்போது, ‘குளித்தலை தொகுதியில் உள்ள குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு எப்போது கட்டித்தரும் .? என்று இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இரா .மாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எம்எல்ஏவின் கேள்விக்கு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பெ. மூர்த்தி இவ்வாறு விளக்கம் அளித்தார், ‘குளித்தலை தொகுதியில் உள்ள குளித்தலை சார்பதிவாளர் அலுவலகம் 16.04.2018 முதல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் இந்த ஆண்டிலேயே கட்டப்படும்’ என தெரிவித்தார்.
இதேபோன்று, ‘மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய சார் கருவூலம் அரசு அமைக்குமா..? என்ற மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி எழுப்பிய கேள்விக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய கருவூலம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு தெரிவிக்கப்படும்’ என்று பதிலளித்தார்.