ராணிப்பேட்டையில் விவசாயிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரிலிருக்கும் விவசாயிகள் அவர்கள் சாகுபடி செய்யும் நெற்பயிர்களை அதேப் பகுதியிலிருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில் விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச நிர்ணய விலையை விதிக்க கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அந்தக் கூட்டத்தின் அருகிலிருக்கும் சாலையில் விவசாயிகள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.