இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
மொஹாலியில் நாளை நடக்கவுள்ள இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு 100 ஆவது போட்டியாகும். இந்நிலையில் விராட் கோலி குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது விராட் கோலியின் இந்த டெஸ்ட் பயணம் மிகவும் மகத்தானது என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி அவர் கேப்டனாக இருந்தபோது இந்திய டெஸ்ட் அணி நல்ல முன்னேற்றத்தைக் கண்டது என்றும், கடந்த 6 வருடங்களில் இந்தியா வெற்றிகளை குவித்ததற்கு அவர் தான் முதன்மை காரணம் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் கூறியதாவது, முதன்முறையாக சீனியர் வீரர்கள் இல்லாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடியபோது விராட் கோலி சதம் அடித்ததை என்னால் மறக்க முடியாது என்றும் ரோகித் கூறியுள்ளார். மேலும் அந்த இன்னிங்சை தன்னால் மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.