பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதனை எதிர்த்து அகில இந்திய வங்கிகள் சங்கம் வரும் மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும், நாடு மக்களுக்காக நடத்த உள்ளதாகவும் வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்துறை வங்கிகள் இருந்தால் தான் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் கூறியுள்ளார். எனவே நாடு தழுவிய இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிவிட்டால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகின்றது.