நடிகை சாய் பல்லவி மலையாள திரையுலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கும் உள்ள வேறுபாட்டை கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழி திரைப் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் மூலம் தனது அசத்தலான நடனத் திறமையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி அளித்த பேட்டி ஒன்றில் மலையாள திரையுலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கும் உள்ள வேறுபாட்டை கூறியுள்ளார். அதில் மலையாள திரையுலகில் அனைவரையும் ஒரே மாதிரி சமமாக நடத்துகிறார்கள் ஆனால் தெலுங்கு திரையுலகில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார் . சாய்பல்லவியின் இந்தக்கருத்து தெலுங்கு திரையுலகில் பிறமொழி நடிகைகளுக்கு சமமான மரியாதை கொடுப்பதில்லை என்பது போன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.