உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் தங்கள் நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்து வருகிறது.
இந்நிலையில் ஜப்பானில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே இலங்கையிலும் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக இந்த இரு நாடுகளுக்கும் மக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், இது உருமாறிய கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.