Categories
லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை 1 முறை சாப்பிடுங்க…. மீண்டும் சூடுபடுத்தி சாப்படாதீங்க…. ஆபத்து இருக்கு மக்களே…!!

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒருமுறை சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி நாம் சாப்பிடும் போது நமக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆனாலும் பலரும் இரண்டு நாட்களுக்கு மேலும் சூடுபடுத்தி சாப்பிட்டு வருகின்றனர். அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இறைச்சி:

கோழி இறைச்சியில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும. எனவே இந்த கோழி கறியை சமைத்து அதை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள புரதச்சத்து மேலும் அதிகரிக்கிறது. இதனால் புட் பாய்சன் ஆக மாற வாய்ப்பு உள்ளது.

உருளைக்கிழங்கு:

மேலும் உருளைக்கிழங்கையும் சமைக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் நம்மில் பலர் அதன் சுவை காரணமாக பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறோம். இவ்வாறு சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அப்படியே தங்கிவிடுகிறது.

கீரை:

கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளது. எனவே கீரையை சமைத்து சாப்பிட்டு மீதமுள்ளதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது நைட்ரேட் ஆனது நைட்ரேஸாக மாறி புற்று நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முட்டை:

புரோட்டீன் நிறைந்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தும் போது அது விஷமாக மாற கூட வாய்ப்புள்ளது. இதனால் செரிமான கோளாறு மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

காளான்:

காளான் வாங்கினால் உடனுக்குடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. இதில் புரோட்டின் இருப்பதால் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதுவும் விஷமாக மாறும். இதுவும் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சமையல் எண்ணெய்:

ஒரு நாள் பொறிக்கவோ அல்லது வேறு எதற்காகவோ பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சோறு:

சோறு மீதம் இருந்தால் அதை தண்ணீர் ஊற்றி வைத்து பழைய சாதமாக சாப்ப்பிடலாம். ஆனால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.

பீட்ருட்:

பீட்ருட் சமைத்து சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்தால் அதை பிரிட்ஜில் வைத்து விட்டு மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

 

Categories

Tech |