Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த உருவத்திற்கு இப்படி ஒரு அழகான பெண்ணா….?” ரவீந்தர் ஓபன் டாக்….!!!!!

தனது உருவத்திற்கு இப்படி ஒரு அழகான பெண் கிடைத்தது குறித்து பேட்டியில் ரவீந்தர் கூறியுள்ளார்.

மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் அதற்கு ரவிந்தர் பதிலளித்துள்ளார். திருமணம் குறித்து ரவீந்தர் பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்த கல்யாணம் பற்றி தான் நாடே பேசுகின்றது. ஏகப்பட்ட பிரச்சனை இருந்தும் எங்களைப் பற்றி ஏன் பேசுவது என்றால் இந்த உருவத்துக்கு இவ்வளவு அழகான பெண், இது எப்படி சாத்தியம் என பேசுகின்றது. இந்த உருவத்துக்கு மட்டும் இல்லை எந்த உருவத்திற்கும் காதல் உண்மையாக இருந்தால் வந்துவிடும். இந்த உருவம் அந்த உருவம் என்பதெல்லாம் இல்லை. இப்படி நிறைய பெண்கள் இருக்கின்றார்கள். அதை நீங்கள் பார்ப்பது இல்லை என்பதுதான் உண்மை என கூறியுள்ளார் ரவீந்தர்.

Categories

Tech |