Categories
தேசிய செய்திகள்

இந்த ஏடிஎம் கார்டுகளுக்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!!

வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த விவரங்களில் சேகரிக்கப்படும் சர்வர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த உத்தரவை மாஸ்டர் கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை என்பதால், ரிசர்வ் வங்கி இந்தத் தடையை விதித்திருக்கிறது. அதேசமயம், ஏற்கெனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |