பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பிக் பாஸாக தான் இருக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டிற்கு பதிலாக 100 ஏக்கர் புஞ்சை நிலம் இருக்க வேண்டும். அதில் அனைவரும் கோவணம் கட்டி உழவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.