உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் கற்பூரவள்ளியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் உடலில் உள்ள பல நோய்களுக்கு இயற்கை மருந்துகளே அருமருந்து. அதன்படி கற்பூரவள்ளி என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடி. இது பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்பு சுவை, காரத்தன்மை மற்றும் வாசனை கொண்ட இதன் இலைகள், தண்டு மற்றும் சாறு அதிக மருத்துவ குணம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை மருந்தாக பயன்படுத்தலாம்.
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி மற்றும் ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு மிக அருமருந்து. காய்ச்சலை விரைவில் தணிக்கும். இதன் இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய் மற்றும் சர்க்கரை இவற்றை நன்றாக கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி உடனே நீங்கும். மேலும் இலை மற்றும் காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுத்து வந்தால் இருமல் மற்றும் சளி காய்ச்சல் போகும்.
குழந்தைகளுக்கு கொடுத்தால் மார்பு சளி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணமும் இதில் உள்ளது. கட்டிகள் உள்ள இடத்தில் இந்த இலையை அரைத்து போட்டால் கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்க உதவும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இளைப்பு நோய்களுக்கு அருமருந்து. கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும். இதற்கும் மேலாக மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணர உதவும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். இவ்வாறு பல மருத்துவ குணங்களை கொண்ட இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.