Categories
தேசிய செய்திகள்

இந்த ஒரு சம்பவம் போதும்… மக்களே எச்சரிக்கையாக இருங்க…!!!

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு விரைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனா குறித்த அச்சம் எதுவும் இல்லாமல் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் முழுமையாக கொரோனா பாதிப்பு போகவில்லை என்பதை மக்கள் யாரும் நினைக்காமல் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குடியிருப்பில் நடந்த விருந்தில் பங்கேற்றோருக்கு தொற்று உறுதியான நிலையில், நடத்தப்பட்ட பரிசோதனையில் 103 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் கொரோனா மீதான பயம் இல்லாமல் இருக்க வேண்டாம். தொடர்ந்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இல்லை என்றால் இது போன்ற பாதிப்புக்கு நீங்களும் ஆளாகி விடுவீர்கள்.

Categories

Tech |