உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் நாயுருவியின் அற்புத மருத்துவ பயன்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி செந்நாயுருவி அதிக மருத்துவ பயன்கள் கொண்டது. இதில் பெண் தன்மை மற்றும் தெய்வத்தன்மை இரண்டும் உண்டு. இது தெய்வீக ஆற்றல் கொண்டது. இதன் விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமன்றி சிறுநீர் பெருக்குதல், நோய் நீக்கி உடல் தேற்றுதல், சதை நரம்பு ஆகியவை சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாக உள்ளது. கதிர் விடாத இதன் இலைகளை இடித்து சாறு பிழிந்து அதில் நீர் கலந்து காட்சி தினமும் மூன்று வேளை 3 மில்லி அளவு ஐந்து முதல் ஆறு நாட்கள் சாப்பிட்டு பால் அருந்த வேண்டும். அவ்வாறு செய்தால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்றாக செயல்படும்.
சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்தம், உடலில் நீர் கோர்த்தல், ஊது காமாலை மற்றும் குருதி மூலம் ஆகியன மிக விரைவில் குணமாகும். இதன் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் விரைவில் குணமாகும். மேகநோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு மற்றும் பேதி குணமாகும். இதன் இலைகளைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரத்தில் 2 முறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் சளி மற்றும் இருமல் குணமாகும்.