உடலில் உள்ள பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கிவி பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிகளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சில பழங்களில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
அதன்படி சீனாவை பூர்வீகமாக கொண்ட கிவி பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அது சற்று புளிப்புச் சுவை கொண்ட பழம் என்பதால் சாலட் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம். விட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டிஎன்ஏ சிதைவுகளில் இருந்து நம்மை காக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. இவ்வாறு பல மருத்துவ குணம் கொண்ட கிவி பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதனை ஜூஸாக குடிப்பது நல்லது.