திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து என்னை விடுவித்து கொண்டு தேசிய இயக்கமான பாரதிய ஜனதா கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். இது சட்டமன்ற தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்துமா ? என்று கேட்கிறீர்கள். என்னை அறிவிக்கப்பட்டவுடன் வேர்ல்ட் அப் மௌத் அப்படி என்று சொல்வார்கள் அல்லவா, அதுதான் இன்றைக்கு பவர்ஃபுல் ஆனது.
தாமரை மதுரை வடக்கு தொகுதி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் மலரும். உலகம் முழுவதும் இதுதான் செய்தி. அதனால் இது பிளஸ் பாயிண்டு தான். அடிப்படையில் நான் ஒரு மருத்துவர், சமூகசேவகன் என்ற அடிப்படையில் இருக்கிறேன். நான் எதற்காக திமுகவில் இருந்து வந்தேன் ? பாரதிய ஜனதா கட்சியில் ஈர்த்த விஷயங்களை சொன்னேன்.
மாண்புமிகு பாரத பிரதமர் கொரானாவில் அதிகமாக பாடுபட்டார்கள். எவ்வளவு உயிர்களை இழந்தோம். என் குடும்பத்தில் கூட என்னுடைய அத்தை நான் இழந்தேன். கொரோனா தடுப்பூசி வராது என்று சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் தடுப்பூசி கொண்டு வந்து மில்லியன் கணக்கில் 70க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஃப்ரீயாக கொடுத்த்தோம். இந்த ஒரு விஷயம் போதும் பாஜகவில் இணைவதற்கு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி. பாரத பிரதமரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் நீங்கள் வாழ்க்கையில் இழந்தது எது என்று கேட்கும் போது ? அவர் நான் மூன்று முறை சி .எம் ஆக இருந்திருக்கின்றேன். இரண்டு முறை பிஎம்யாக இருந்து கொண்டு இருக்கின்றேன் .ஆனால் கலாச்சாம் மிகுந்த தமிழ் மொழியை கற்க வில்லையே என்ற ஒன்றை தான் நான் பெரும் இழப்பாக கருதுகிறேன் என்று சொன்னார். இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.
ஒரு கல்யாணத்தில் பத்து பொருத்தம் இல்லாமல், 7,8 பொருத்தத்தில் பண்ணுகின்றோம் அல்லவா, அந்த மாதிரி விஷயங்கள் தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களை முன் நிறுத்தி பேசுவதைவிட மொத்தத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக திருப்பரங்குன்றத்தில் நான் இருந்தேன். இரண்டு வருடம் தான் நான் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
நடுவில் ஒரு பிரச்சனை வந்தது. தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம். அப்போ முருகக்கடவுளை இழிவு படுத்தக்கூடிய வகையில், திராவிட இயக்கம் செயல்படும் போது, நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கும்போது எனக்கு மனசு பெரிய கஷ்டமாக இருந்தது. அப்போ சின்ன சின்ன நெருடல்கள் தொடர்ச்சியாக தொடர்ந்தது, இது ஒரு கட்டத்தில் வெடிக்குது. எதிர்ப்பை தலைமைக்கு நான் பதிவு செய்து இருக்கின்றேன்.கட்சி தலைமை இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தேன் என்றார்.