Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு வேர் போதும்… உடலில் எந்த நோயுமே அண்டாது… வெட்டிவேரின் மகிமைகள்…!!!

உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் வெட்டிவேரின் மகிமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வெட்டிவேரை எலுமிச்சை வேறு என்றும் சிலர் கூறுவார்கள். நீர்க்கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து வெந்நீரில் 200 மில்லிகிராம் குடித்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும். கோடை காலங்களில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. இதனை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல்சூடு மற்றும் தாகம் தணியும்.

மேலும் காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாக பயன்படுகிறது. சளி தொந்தரவு ஏற்பட்டால் இது மருந்தாக அமையும். வெட்டிவேரின் எண்ணெய் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவினால் அது மறைந்து விடும். இதனை தேய்த்துக் குளித்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. மேலும் கூடுதல் அழகு கிடைக்கும். வெயில் காலங்களில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு இதனை நீரில் ஊறவைத்து அரைத்து, குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வரலாம்.

தீ காயங்களின் மீது வெட்டி வேரை அரைத்துப் பூசினால் காயங்கள் விரைவில் குணமடையும். கால் எரிச்சல் மற்றும் கால் வலி போன்றவற்றிற்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றுப்புண்ணுக்கு இது சிறந்தது. இவ்வாறு உடலில் உள்ள பல நோய்களுக்கு இது அருமருந்தாக அமைகிறது.

Categories

Tech |