வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க நம் வீட்டு சட்னி முதல் பல சமையலுக்கு சேர்க்கும் ஒரு பொருள் பெரிதும் உதவி புரியும்.அது தான் புதினா. இது சுவையையும் தாண்டி பல மகத்தான மருத்துவ நன்மைகளுக்காக ஆயுர்வேதத்தில் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. கூடுதலாக, புதினா இலைகள் உடல் எடையை இரட்டிப்பு வேகத்தில் குறைக்கவும் உதவும்.புதினா எப்படி உடல் எடையை இழக்க உதவுகிறது என்பதை இப்போது காண்போம்.
புதினா அனைத்து விதமான செரிமான பிரச்சனைகளைப் போக்கக்கூடியது. இதில் இருக்கும் செயலில் உள்ள உட்பொருட்கள், செரிமானத்தை மேம்படுத்தும்.மோசமான செரிமானம் தான் ஒருவரது எடை இழப்பிற்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. செரிமான மண்டலம் சிறப்பாக இல்லாத போது, உடலால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போவதோடு, உடலில் இருந்து கழிவுகளையும் திறம்பட வெளியேற்ற முடியாமல் போய், எடை அதிகரிக்க தூண்டும்.
புதினாவில் கலோரிகள் மிகவும் குறைவு. 2 டேபிள் ஸ்பூன் புதினா இலைகளில் 2 கலோரிகளே உள்ளன. எனவே இது எடை இழப்பு டயட்டில் சேர்க்க ஏற்ற மிகவும் சிறப்பான மூலிகை. தினமும் உணவில் ஒரு இலையை சேர்த்து கொண்டாலே போதும் நல்ல ஒரு மாற்றத்தினை உணரலாம்.
எடையைக் குறைக்க புதினா இலைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
புதினா நீர்
எடையை இழக்க நினைப்போருக்கு புதினா நீர் மிகவும் சிறப்பான பானம். இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருக்க உதவும். அதற்கு 4-5 புதினா இலைகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து (ஃப்ரிட்ஜில் கூட வைக்கலாம்), மறுநாள் காலையில் அந்நீரைக் குடிக்க வேண்டும். வேண்டுமானால், அத்துடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புதினா டீ
புதினா டீ உடலின் மெட்டபாலிசத்தில் மாயங்களை ஏற்படுத்தி, வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும். அதற்கு சிறிது உலர்ந்த புதினா இலைகளை நீரில் போட்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.