வோடாபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் ரெட் எக்ஸ் ஃபேமிலி என்ற புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 3 மற்றும் 5 உறுப்பினர்களுக்கான ரூ.1,699 மற்றும் ரூ.2,299 ஆகிய இரண்டு போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் இரண்டு அல்லது நான்கு உறுப்பினர்களை சேர்க்க முடியும்.
இதில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை பெறமுடியும். மேலும் வரம்பற்ற டேட்டா மற்றும் மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ்களை பெறலாம். அதுமட்டுமல்லாமல் இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் அமேசான் ப்ரைம் இற்கான ஒரு ஆண்டு கால சந்தா, ஒரு வருட நெட்ப்ளிக்ஸ் சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி ஒரு வருட சந்தா மற்றும் சர்வதேச உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கான அணுகல் மற்றும் ஜிஎஸ்டி அழைப்புகள் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
வோடாபோன் ஐடியா ரெட் எக்ஸ் ஃபேமிலி ரூ.2,299 திட்டத்தில் 5 பயனர்களுக்கான ஆதரவை வழங்குகிறது. அதாவது முதன்மை உறுப்பினர் கூடுதலாக நான்கு பயனாளர்கள் வரை இரண்டாம்நிலை உறுப்பினர்களாக இந்த திட்டத்தில் சேரலாம். இதில் ரூ.1,699 திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து நன்மைகளும் இதிலும் வழங்கப்படும்.புதிய விஐ பிசினஸ் திட்டங்கள் ரூ.299 இலிருந்து தொடங்குகின்றன மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அந்த நான்கு திட்டங்களின் விலைகள்: ரூ.299, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.499 ஆகும்.